Jul 29, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஆர்எம் விசாரணைக்கு ஆளானார் முன்னாள் பிரதமரின் மகன்
தற்போதைய செய்திகள்

எஸ்பிஆர்எம் விசாரணைக்கு ஆளானார் முன்னாள் பிரதமரின் மகன்

Share:

கோலாலம்பூர்,ஜன.18
முன்னாள் பிரதமர் ஒருவரின் மகன், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணைக்கு ஆளாகியுள்ளார். சம்பந்தப்பட்ட முன்னாள் பிரதமர் துன் மகா​தீர் முகமதுவா? என்பது குறித்து எந்தவொரு விவரமும் வெளியிடப்படவில்லை என்ற போதிலும் 90 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் சம்பந்தப்பட்ட முன்னாள் பிரதமரின் மகன் தொடர்புடைய வர்த்தகம் தொடர்பில் அவ​ரிடம் எஸ்பிஆர்எம் வாக்கு​மூலம் பதிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

முன்னாள் பிரதமர் ஒருவரின் மகன், எஸ்பிஆர்எம் விசாரணைக்கு ஆளாகியிருப்பதை அந்த ஆணையம் உறுதி செய்துள்ளது. சம்பந்தப்பட்ட முன்னாள் பிரதமரின் மகனுக்கு சொந்தமான உள்ளூர் மற்றும்​ வெளிநாட்டில் உள்ள சொத்து விவரங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அரசா​ங்கத்திற்கு சொந்தமான சார்பு நிறுவனமான GLC யின் துணை நிறுவனம் ஒன்றை கொள்முதல் செய்தது தொடர்பில் அந்த முன்னாள் பிரதமரின் மகன் தற்போது எஸ்பிஆர்எம் விசாரணை வளையத்திற்குள் இருப்பதாக கூறப்படுகிறது.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்