கோலாலம்பூர், ஆகஸ்ட்.17-
பெர்லிஸ், கங்காரில், இரண்டு கடைகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 900 ரிங்கிட் மதிப்புள்ள மின் சிகரெட்டுகளும் அதற்கானத் திரவப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சோதனை, பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்டது என புக்கிட் அமான உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது அமைதித் துறையின் தலைவர் அஸ்மி அபு காசீம் கூறினார்.
இந்தப் பறிமுதலில், 6 ஆயிரத்து 318 மின் சிகரெட் சாதனங்களும், திரவங்களும் அடங்கும். ஆகஸ்ட் 1 முதல் பெர்லிஸ் அரசாங்கம் மின் சிகரெட் விற்பனைக்குத் தடை விதித்த போதிலும், இந்த விற்பனை தொடர்ந்து நடைபெற்று வந்தது. சட்டத்திற்குப் புறம்பான விற்பனையைத் தடுக்க, சம்பந்தப்பட்ட முகமைகளுடன் இணைந்து காவல்துறை தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.








