Sep 23, 2026
Thisaigal NewsYouTube
பூச்சோங் மருத்துவமனையில் வெடிகுண்டு புரளி – போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

பூச்சோங் மருத்துவமனையில் வெடிகுண்டு புரளி – போலீஸ் விசாரணை

Share:

பன்டார் புத்திரி, பூச்சோங் பகுதியில் உள்ள கொலம்பியா ஏசியா மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல், வெறும் புரளி என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் பரித் அகமது வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று பிற்பகல் 2.54 மணியளவில் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்து என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவும், கே9 மோப்ப நாய் பிரிவும் அங்கு சோதனை நடத்திய போது, சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News