கெடா சுங்கை டுரியானில், கெ கம்போங் பாசிர் ஜெரிங்கிற்கு செல்லும் பாதையில் 0.7 மீட்டர் வரை வெள்ளம் ஏற்பட்டு அச்சாலை மூழ்கியதால், செனுலாங் தேசியப் பள்ளி, சுங்கை எம்பக் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 மாணவர்களும் ஆறு பெற்றோர்களும் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது அந்த வெளத்தில் சிக்கிக் கொண்டார்கள்.
நேற்று இரவு தொடங்கி விடாமல் ப்ய்த மழையால், அருகில் உள்ள செனுலாங் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டதில் இன்று முற்பகல் 11 மணி அளவில் இச்சம்பவம் நேர்ந்தது.
சுங்கை டுர்யான் தீடணைப்பு - மீட்புப் ப்டையின் அதிகாரி ஜுனிமான் ஜூனோ இது குறித்து தெரிவிக்கயில், மாணவர்களின் பெற்றோரிடம் இருந்த தமது தரப்புக்கு உதபி கோரும் அழைப்பு வந்ததாகவும் அவர்கள் ஆற்றைக் கடக்க படகு பயன்படுத்தப்பட்டதாகவும் ஜுனிமான் ஜூனோசொன்னார்.
அவர்களைக் காப்பாற்றும் பணி நண்பகல் 12 மணி தொடங்கி பிற்பகல் 3.80 மணி வரை நீடித்தது.








