கோலாலம்பூர் மாநகரில் கடந்த சனவரி 1 முதல் அக்டோபர் 31 வரைடில் குற்றச் செயல்கள்ம்10 விழுக்காடு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் 4,713 ஆக இருந்த அவ்வெண்ணிக்கை இவ்வாண்டு 3,763 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் காவல் துறை தலைவர் டத்தோ அல்லவுடின் அப்துல் மாஜிட் தெரிவித்தார்.
அதே சமயம், 101 மில்லியன் மதிப்பிலான போதை பொருட்களை போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு பறிமுதல் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு குற்றங்களுக்காக இவ்வாண்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,199 ஆக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் அந்த எண்ணிக்கையில் 481 பேர் அதிகரித்துள்ளனர் என அவர் மேலும் சொன்னார்.








