ஷா ஆலாம், ஜூலை.15-
மலேசிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வழக்கத்திற்கு மாறான ஒரு முக்கிய அறிவிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிடவிருக்கிறார்.
இதனைப் பிரதமர் தமது முகநூலில் தெரிவித்துள்ளார். எத்தகைய முக்கிய அறிவிப்பு என்பது விளக்கப்படவில்லை. ஆனால், மலேசியா மடானி டான் பெர்சாமா மலேசியா கு என்ற ஹேஷ்டேக்குகளுடன் ( # ) அந்தப் பதிவு காணப்பட்டது.
இதற்கிடையில் பிரதமரின் இந்த அறிவிப்பானது, நேற்று புத்ராஜெயாவில் பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் நடத்திய சந்திப்புடன் தொடர்புடையதாகும் என்று சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் தெரிவித்துள்ளார்.








