Sep 27, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பூலோ சிறையிலிருந்து தப்பியோடிய கைதி மீண்டும் கைது!
தற்போதைய செய்திகள்

சுங்கை பூலோ சிறையிலிருந்து தப்பியோடிய கைதி மீண்டும் கைது!

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.19-

கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி சுங்கை பூலோ சிறையிலிருந்து தப்பியோடிய 24 வயதுடைய கைதி, நேற்று மாலை 5 மணியளவில் கோம்பாக் லாமா, பத்து 14 பகுதியில் வைத்து காவற்படையால் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஷா ஆலாம் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு காவற்படையின் காவலில் இருந்து தப்பிய அந்த நபர், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றம், குடிநுழைவு விதிமீறல் தொடர்பான வழக்குகளுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தப்பியோடிய கைதியைப் பிடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துத் தரப்பினருக்கும் சிலாங்கூர் மாநிலக் காவற்படைத் தலைவர் டத்தோ ஷாஸெலி காஹார் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

Related News