கோலாலம்பூர், செப்டம்பர்.21-
சாரா அரசாங்க உதவித் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு, பழுதடைந்த மைகாட் அட்டைகளை மாற்றும் மக்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. பழுதடைந்த சிப்கள் காரணமாக இந்த உதவிகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதே இதற்கு முக்கியக் காரணம் என்று தேசியப் பதிவுத்துறையின் தலைமை இயக்குநர் பட்ருல் ஹிஷாம் அலியாஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் சுமார் 20 விழுக்காடு விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன. ஆனால், மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும், உண்மையிலேயே பழுது ஏற்பட்டால் மட்டுமே மைகாட்களை மாற்ற வரவும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.








