கோலாலம்பூர், அக்டோபர்.02-
கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள அமெரிக்கத் தூதகரத்தின் முன்புறம் இன்று நடத்தப்பட்ட இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
தூதரகத்திற்கு வெளியே கைகலப்பில் ஈடுபட்டது தொடர்பில் 23, 32 வயதுடைய இரு நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ஃபாடில் மர்சுஸ் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 பேர் கலந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார். போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதற்காக அந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








