கோலாலம்பூர், அக்டோபர்.29-
நாள் வளர்ப்பாளர்கள், தங்கள் நாய்களின் பராமரிப்புக்காகக் கட்டாயமாகக் காப்புறுதி எடுக்கும் எடுக்கும் திட்டம் மீதான பரிந்துரையை அமல்படுத்துவது மாநில ஊராட்சி மன்றங்களைப் பொறுத்ததாகும் என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
தாங்கள் வளர்க்கும் நாயினால் மற்றவர்களுக்கு இடர் ஏற்படும் போது, அதற்குரிய இழப்பீட்டை வழங்க வகை செய்யும் இத்திட்டம் ஒவ்வொரு மாநிலத்தின் ஊராட்சி மன்றங்களின் பரிசீலனைக்கே விடப்படுவதாக ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.








