கோலா திரங்கானு, ஜூலை.12-
திரங்காணு மாநிலம், கோங் பாடல் பகுதியில் நேற்று நடைபெற்ற சூப்பர் பைக் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, தனது தங்கும் இடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த 40 வயதுடைய பெண் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், சாலை தடுப்பில் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.
இது குறித்து கோலா திரங்காணு மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்லி நோர் வெளியிட்டுள்ள தகவலில், நேற்று மாலை சுமார் 6.45 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண், சிலாங்கூர் மாநிலம், பண்டார் பாரு சாலாக் திங்கி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.








