Jul 12, 2026
Thisaigal NewsYouTube
ரவாங் பள்ளி மாணவர் பகடி வதைச் சம்பவம்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி இலாகா உறுதி
தற்போதைய செய்திகள்

ரவாங் பள்ளி மாணவர் பகடி வதைச் சம்பவம்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி இலாகா உறுதி

Share:

ரவாங், ஜூலை.12-

ரவாங் உள்ள பள்ளியில் மாணவர்கள் தொடர்பான பகடிவதை சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிலாங்கூர் மாநில கல்வி இலாகா உறுதியளித்துள்ளது.

இச்சம்பவத்தை மிகவும் தீவிரமாகக் கருதுவதாக தெரிவித்துள்ள கல்வி இலாகா, தவறில் ஈடுபட்டவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பும் நலனும் பாதிக்கப்படும் எந்தவித தவறான நடத்தையையும் மாநில கல்வி இலாகா ஒரு போதும் சகித்துக் கொள்ளாது என்றும் தெரிவித்துள்ளது.

நேற்று சமூக ஊடகங்களில் பரவிய காணொளி ஒன்றில், மாணவர் ஒருவர் தனது பள்ளித் தோழரை மீண்டும் மீண்டும் தாக்கும் காட்சியும், அதைச் சுற்றியிருந்த மற்ற மாணவர்கள் தடுக்காமல் தங்களது கைப்பேசியில் பதிவு செய்யும் காட்சியும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News