ஷா ஆலாம், ஜூலை.12-
சிலாங்கூர் மாநிலம் கம்போங் ஜாவா பகுதியில் உள்ள காகித ஆலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு கண்டெய்னர்களில் உறங்கிக் கொண்டிருந்த 50 வெளிநாட்டு தொழிலாளர்கள் காயமின்றி உயிர்தப்பினர்.
அதிகாலை 1.46 மணியளவில் தகவல் கிடைத்ததையடுத்து, சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அடுக்கி வைக்கப்பட்டிருந்த காகிதக் குவியலின் அடிப்பகுதியில் இருந்து தீப்பற்றியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், தீப்பற்றிய ஆலை பெட்ரோனாஸ் எரிவாயு குழாய்க்கு அருகில் இருந்ததால் ஆபத்து அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், அதிகாலை 2.50 மணிக்குள் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் அருகிலிருந்த மற்ற தொழிற்சாலைகளுக்கு பரவுவது தடுக்கப்பட்டது.
சம்பவத்தில் உயிரிழப்போ காயமோ எதுவும் ஏற்படவில்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.








