Sep 24, 2026
Thisaigal NewsYouTube
ஷா ஆலமில் சோதனை ஓட்டம் செய்வதாகக் கூறிய காருடன் தப்பிய மர்ம நபர்
தற்போதைய செய்திகள்

ஷா ஆலமில் சோதனை ஓட்டம் செய்வதாகக் கூறிய காருடன் தப்பிய மர்ம நபர்

Share:

ஷா ஆலாம், ஜூலை.12-

ஷா ஆலம், தாமான் ஶ்ரீ மூடா பகுதியில் உள்ள பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை நிலையத்தில், ஹாண்டா சிவிக் காரை சோதனை ஓட்டம் செய்வதாகக் கூறி எடுத்துச் சென்று தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் சாருடின் சாமா வெளியிட்டுள்ள தகவலில், உள்ளூர் நபரான சந்தேக நபர், முதலில் வாகன உரிமையாளரைத் தொடர்பு கொண்டு காரை வாங்க விருப்பம் தெரிவித்ததாகவும், பின்னர் நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் கார் விற்பனை நிலையத்திற்கு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர், 30 ரிங்கிட் ரொக்கமாக கொடுத்து காரை வாங்கப் போவதாக கூறிய அந்நபர், சோதனை ஓட்டம் செய்ய அனுமதி பெற்று, அங்கிருந்து காருடன் தப்பி யோடியதாகவும் சாருடின் சாமா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காருடன் மாயமான அந்நபரைப் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் இறங்கியுள்ளனர்.

Related News