Jul 11, 2026
Thisaigal NewsYouTube
கெசாஸ் நெடுஞ்சாலை விபத்து: இரு கார்கள் மோதிக் கொண்டதில் தாய் பரிதாபமாக உயிரிழப்பு, 9 வயது மகன் காயம்
தற்போதைய செய்திகள்

கெசாஸ் நெடுஞ்சாலை விபத்து: இரு கார்கள் மோதிக் கொண்டதில் தாய் பரிதாபமாக உயிரிழப்பு, 9 வயது மகன் காயம்

Share:

ஷா ஆலாம், ஜூலை.11-

கெசாஸ் நெடுஞ்சாலையில் இரு கார்கள் மோதிக் கொண்ட கோர விபத்தில் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு, இந்த நெடுஞ்சாலையின் 30.7-ஆவது கிலோமீட்டரில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் சாருடின் சாமா இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டை இழந்த மற்றொரு கார், பாதிக்கப்பட்ட பெண்ணின் கார் மீது பலமாக மோதியதால் அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

அச்சமயம் காரில் அவருடன் இருந்த ஒன்பது வயது மகன் தலையில் பலத்த காயமடைந்துள்ளார். சிறுவன் தற்போது கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசரச் சிகிச்சை பெற்று வருகிறான்.

Related News