கோலாலம்பூர், ஜூலை.11-
'பாவி' (Bavi) சூறாவளியினால் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக, கோலாலம்பூர் மற்றும் ஷாங்காய் இடையிலான கூடுதல் விமானச் சேவைகளை மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளது. முன்னதாக, கோலாலம்பூர் - தைப்பே இடையிலான விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
இன்று MH386, MH388, MH389 மற்றும் நாளை MH387 புறப்படவிருந்த ஷாங்காய் விமானச் சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. மோசமான வானிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் கூறியுள்ள இந்நிறுவனம், பயணிகள் தங்களின் பயண அட்டவணையை 30 நாட்களுக்குள் கட்டணமின்றி மாற்றிக் கொள்ளலாம் அல்லது பணத்தைத் திரும்பப் பெறலாம் என அறிவித்துள்ளது. பயணிகள் தங்களின் தொடர்பு விவரங்களை "My Booking" பக்கத்தில் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.








