Aug 16, 2026
Thisaigal NewsYouTube
புடி மடானி: குடும்பத்திற்குள் டீசல் மானியத்தை மாற்ற 5,000 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல்
தற்போதைய செய்திகள்

புடி மடானி: குடும்பத்திற்குள் டீசல் மானியத்தை மாற்ற 5,000 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல்

Share:

கோலாலம்பூர், ஜூலை.11-

புடி மடானி திட்டத்தின் கீழ், ஒரே குடும்ப உறுப்பினர்களுக்குள் டீசல் மானியக் கோட்டாவை மாற்றிக் கொள்ளும் 5,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. வாகன உரிமையாளர் பெயரில் இல்லாமல், குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் வாகனத்தைப் பயன்படுத்தும் பட்சத்தில் இந்த வசதி உதவும் என்று கருவூலத்தன் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஜொஹான் மஹ்மூட் மெரிகான் தெரிவித்தார்.

மேலும், பிக்அப் வாகனம், மற்றும் எஸ்யூவி வாகனங்களுக்குக் கூடுதலாக 100 லிட்டர் மானிய டீசல் வழங்கும் 2 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்களுக்கும் நிதியமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளது. சபா மற்றும் சரவாக்கின் கிராமப்புறங்களில் உள்ள ஜெனரேட்டர்கள் மற்றும் படகுகளுக்கும் இந்த மானியத்தை நீட்டிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்று அவர் விளக்கினார்.

Related News