ஜார்ஜ் டவுன், செப்டம்பர் 21-
பினாங்கு மாநிலத்திற்கு தமக்கு அடுத்து முதலமைச்சர் பதவியை ஏற்பவர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு மாநில அரசாங்கத்தின் தொலைநோக்கு இலக்கான 2030 லட்சியத் திட்டத்தை முன்னெடுப்பார் என்று முதலமைச்சர் சௌ கோன் இயோவ் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
பினாங்கு முதலமைச்சர் என்ற முறையில் தமது பதவிக்காலம் 2030 வரையில் நீடிக்காது என்பதால் 2030 ஆம் ஆண்டிற்கான பினாங்கு மாநிலத்தின் தொலைநோக்குத் திட்டத்தின் அடைவு நிலையை தனிப்பட்ட முறையில் தாம் பார்க்காமல் போகலாம் என்று சௌ கோன் இயோவ் குறிப்பிட்டார்.
அந்த எதிர்பார்ப்பை தமக்கு அடுத்து வரக்கூடிய முதலமைச்சர் அந்த தொலைநோக்கு இலக்கை வெற்றிகரமான நிறைவு செய்வார் என்று தாம் பெரிதும் நம்புவதாக சௌ கோன் இயோவ் தெரிவித்தார். .
இன்று பினாங்கு கோம்தாரில் பினாங்கு மாநிலத்தின் 2030 ஆம் விழாவை தொடக்க விழாவில் போது சௌ கோன் இயோவ் இதனை குறிப்பிட்டார்.








