Sep 26, 2026
Thisaigal NewsYouTube
சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு
தற்போதைய செய்திகள்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

Share:

அம்பாங்/ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடத்தில் செல்லும் இரயில் ஒன்று இன்று காலை சான் சோவ் லின் நிலையத்தில், தண்டவாளத்தின் மாற்றுப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டதால், சேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்து ரேபிட் கேஎல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயிலில் இருந்த 25 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்றும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் உண்மையானவை என்பதையும் ரேபிட் கேஎல் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பயணிகளின் போக்குவரத்து பாதிக்கப்படாமல் தொடரும் வகையில் மாற்று சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ரேபிட் கேஎல் தெரிவித்துள்ளது.

Related News