Oct 16, 2026
Thisaigal NewsYouTube

அடிப்படைப் பொருட்களின் விநியோகிப்பில் தடை ஏற்படாது – மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அடிப்படைப் பொருட்களின் விநியோகிப்பில் தடை ஏற்படாது – மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்

நவ. 29-

நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பால் அடிப்படைத் தேவைக்கானப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் இருந்த நிலையில், போதுமான அளவு இருப்பு உள்ளதாக உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அனைச்சு உறுதியளித்துள்ளது.

இது குறித்து துணை அமைச்சர் Fuziah Salleh தெரிவிக்கயில், வெள்ளத்தால்லுற்பத்தி , விநியோகச் சங்கிலி பாதிக்கப்படக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு, வியாபாரிகளுக்கு அதிக அளவு பொருட்களை சேமித்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக கிளாந்தான் போன்ற பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பொருட்கள் விநியோகம் பாதிக்கப்படலாம். ஆனால், வியாபாரிகள் போதுமான அளவு பொருட்களை சேமித்து வைத்துள்ளனர். எனவே, பொருட்கள் விநியோகத்தில் எந்தவித தடையுமில்லை, என்று அவர் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →