Aug 13, 2026
Thisaigal NewsYouTube
தாபோங் ஹாஜி ஒப்பந்த சர்ச்சை: டோனி புவா திட்டவட்ட மறுப்பு
தற்போதைய செய்திகள்

தாபோங் ஹாஜி ஒப்பந்த சர்ச்சை: டோனி புவா திட்டவட்ட மறுப்பு

Share:

தாபோங் ஹாஜி யாத்ரீகர் நிதி வாரியத்துடன் 2019-ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்துகொண்ட சி.வி.எஸ்.பி என்ற சைபர் வில்லேஜ் தொழில்நுட்ப நிறுவனத்தில், தமக்கு எந்தப் பங்கும் இல்லை என்று ஜசெக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த டோனி புவா, 2007- ஆம் ஆண்டிலேயே அந்த நிறுவனத்தின் பங்குகளைத் தாம் விற்றுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால், 4.53 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அந்த மொபைல் செயலி மற்றும் இணையதள மேம்பாட்டு ஒப்பந்தத்திற்கும், தமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், அந்த நிறுவனம் தகுதி அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டதாகவும் டோனி புவா கூறினார்.

இதற்கிடையில், சைபர் வில்லேஜ் நிறுவனம் முஸ்லிம் அல்லாதவர்களால் கட்டுப்படுத்தப்படும் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட 'சில்வர்லேக் ஆக்சிஸ்' நிறுவனத்திற்குச் சொந்தமானது என்ற குற்றச்சாட்டும் இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இதற்குப் பதிலளித்த டோனி புவா, 'சில்வர்லேக் ஆக்சிஸ்' என்பது சிங்கப்பூர் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு மலேசிய நிறுவனமே என்றும், மலேசியாவின் இணைய வங்கித் துறையில் அது முன்னணியில் திகழ்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்

Related News