புக்கிட் செந்தோசா சந்தை அருகில் நடந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக போலீசார் சம்பவத்தில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் ஓர் ஆடவரை தேடி வருவதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டனரமாட் ஃபைசால் தஹ்ரிம் தெரிவித்தார்.
சந்தையில் பொருட்கள் வாங்க உள்ள செல்லவிருந்த 39 வயது மாதுவின் சங்கிலியைப் அறுத்து செல்லும் காணொலி நேற்று மாலை மூன்று மணியளவில் முகநூலில் பதிவேற்றம் கண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். தொழிற்சாலையில் பணிப்புரியும் அந்த மாது இரவு 10.30 மணியளவில் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும், இது தொடர்பாக ஒரு சந்தேக நபரை போலீசார் தேடி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.








