Sep 15, 2026
Thisaigal NewsYouTube
ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி
தற்போதைய செய்திகள்

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

Share:

சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக மலேசிய அரசாங்கம் ஏதேனும் அரசியல் உறுதிமொழி அளித்ததா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என பாஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, பிரதமர் அன்வார் இப்ராஹிம் அண்மையில் சந்தித்ததைத் தொடர்ந்து, இது தொடர்பாக ஏதேனும் பேச்சுவார்த்தை நடந்ததா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுடனான வர்த்தகம், முதலீடு, கல்வி, தொழில்நுட்பம் உள்ளிட்ட நீண்டகால உறவுகள் முக்கியமானவை என்றாலும், அவை மலேசியாவின் நாடு கடத்தல் சட்டங்களை மீறக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

அதேவேளையில் வெளிநாடு ஒன்றிடமிருந்து முறையான நாடு கடத்தல் கோரிக்கை வந்தால், அதனை சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு பரிசீலிக்க வேண்டும் என்றும், அரசியல் பேரம் அல்லது பரிவர்த்தனையின் அடிப்படையில் முடிவு எடுக்கக் கூடாது என்றும் தக்கியுடின் தெரிவித்துள்ளார்.

Related News

சிகரெட் துண்டை வீசிய குற்றம்: மலேசியாவில் முதல் முறையாக சிறைத் தண்டனை

சிகரெட் துண்டை வீசிய குற்றம்: மலேசியாவில் முதல் முறையாக சிறைத் தண்டனை

24 மணி நேர கேகே மார்ட் கடைகள் இனி பாதுகாப்பு மையங்களாக செயல்படும் - கோலாலம்பூர் போலீஸ் அசத்தல் திட்டம்

24 மணி நேர கேகே மார்ட் கடைகள் இனி பாதுகாப்பு மையங்களாக செயல்படும் - கோலாலம்பூர் போலீஸ் அசத்தல் திட்டம்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு