Sep 15, 2026
Thisaigal NewsYouTube
சிகரெட் துண்டை வீசிய குற்றம்: மலேசியாவில் முதல் முறையாக சிறைத் தண்டனை
தற்போதைய செய்திகள்

சிகரெட் துண்டை வீசிய குற்றம்: மலேசியாவில் முதல் முறையாக சிறைத் தண்டனை

Share:

மலேசியாவில் பொது இடத்தில் சிகரெட் துண்டை வீசிய குற்றத்திற்காக சிறைத் தண்டனை பெற்ற முதல் நபராக 36 வயது இந்தோனேசியர் பதிவாகியுள்ளார்.

ஜோகூர் மாநிலம் ஸ்தூலாங் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் அவர் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக ஜோகூர் திடக்கழிவு மற்றும் பொது சுகாதார மேலாண்மை கழக இயக்குநர் ஸைனால் ஃபிட்ரி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் விதித்த 1,000 ரிங்கிட் அபராதத்தை செலுத்தத் தவறியதால், கடந்த ஆகஸ்ட் 28 -ஆம் தேதி முதல் அவர் ஒரு மாத சிறைத் தண்டனையை அனுபவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைத் தண்டனை முடிந்ததும், அவர் 6 மணி நேர சிஎஸ்ஓ எனப்படும் சமூக சேவைப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுவரை நீதிமன்றத்தில் 107 வழக்குகள் சிஎஸ்ஓ தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதில் 59 மலேசியர்களும், 48 வெளிநாட்டினரும் அடங்குவர்.

இந்த வழக்குகளில் மொத்தம் 71 ஆயிரத்து 550 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், சிஎஸ்ஓ தண்டனை 2 முதல் 10 மணி நேரம் வரை வழங்கப்பட்டுள்ளதாக ஸைனால் ஃபிட்ரி தெரிவித்துள்ளார்.

Related News