கெடா மாநிலம், சுங்கை காராங்கான், தாமான் டேசா கயாங்கான் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் மூழ்கி உயிரிழந்த நான்கு சிறுவர்களின் உடல்கள் இன்று ஒரே குழியில் நல்லடக்கம் செய்யப்பட்டன.
மஸ்ஜிட் ஜமேக் நுருல் எஹ்சான் முஸ்லிம் மயானத்தில் மாலை 5.45 மணியளவில் நடைபெற்ற இறுதிச் சடங்கில், சுமார் 1,000 குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
8 முதல் 12 வயதே ஆன அந்த சிறுவர்களின் உடல்கள் தாமான் டேசா கயாங்கான் மசூதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
நேற்று இரவு 7.30 மணியளவில் கால்வாயில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற போது நால்வரும் அதில் தவறி விழுந்து நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்ற இருவர் கூலிம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.








