Sep 15, 2026
Thisaigal NewsYouTube
மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

Share:

பந்தயம், பிட்காயின் சுரங்கம் மற்றும் சிகரெட், மதுபானக் கடத்தல் தொடர்பான வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 35 ஆயிரத்து 516 சட்டவிரோதப் பொருட்களை, பேராக் மாநிலம், மஞ்சோங் மாவட்ட போலீசார் அழித்துள்ளனர்.

இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 2.95 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து பேராக் மாநில துணை போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்லின் சடாரி கூறுகையில், 2019 முதல் 2026-ஆம் ஆண்டு வரை பதிவான 173 விசாரணை ஆவணங்களைச் சேர்ந்த பொருட்கள் இதில் அடங்கும் என்றார்.

அவற்றில் அதிக மதிப்புடையதாக சிகரெட் மற்றும் மதுபானங்கள் 1.575 மில்லியன் ரிங்கிட், பிட்காயின் சுரங்க உபகரணங்கள் 1.275 மில்லியன் ரிங்கிட், சூதாட்டம் தொடர்பான பொருட்கள் 99 ஆயிரத்து 538 ரிங்கிட் மதிப்பிலும் இருந்ததாகக் தெரிவித்தார்.

மேலும், விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடரும் நடவடிக்கைகள் நிறைவடைந்து, பொருட்களை அழிப்பதற்கான அனுமதி பெறப்பட்ட பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிட்காயின் சுரங்க உபகரணங்கள் மின்னணுக் கழிவு மேலாண்மை முறையில் அழிக்கப்பட்ட நிலையில், மற்ற பொருட்கள் அகழ்வாராய்ச்சி இயந்திரம் பயன்படுத்தியும் தீயிட்டும் விதிமுறைகளுக்கு ஏற்ப அழிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related News

சிகரெட் துண்டை வீசிய குற்றம்: மலேசியாவில் முதல் முறையாக சிறைத் தண்டனை

சிகரெட் துண்டை வீசிய குற்றம்: மலேசியாவில் முதல் முறையாக சிறைத் தண்டனை

24 மணி நேர கேகே மார்ட் கடைகள் இனி பாதுகாப்பு மையங்களாக செயல்படும் - கோலாலம்பூர் போலீஸ் அசத்தல் திட்டம்

24 மணி நேர கேகே மார்ட் கடைகள் இனி பாதுகாப்பு மையங்களாக செயல்படும் - கோலாலம்பூர் போலீஸ் அசத்தல் திட்டம்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு