16 வயதே உடைய மனைவியின் சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்த 38 வயது லாரி ஓட்டுநருக்கு 9 ஆண்டுகள் சிறையும், 5 பிரம்படிகளும் விதித்து மூவார் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதி எமிலியா கஸ்வத்தி காலிட் முன்னிலையில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, இந்த தீர்ப்பு விதிக்கப்பட்டது.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி, பத்து பஹாட்டில் உள்ள அவரது வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அச்சிறுமி கர்ப்பமானது தெரிய வந்ததையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றவியல் சட்டம் 376(1)-ன் கீழ் அவருக்கு இத்தண்டனையானது வழங்கப்பட்டது.
மேலும், சிறைத் தண்டனை காலத்தில் ஆலோசனை பெறவும், விடுதலையான பிறகு ஒரு ஆண்டு போலீஸ் கண்காணிப்பில் இருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








