Sep 15, 2026
Thisaigal NewsYouTube
யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

Share:

யோங் பெங் அருகே வடக்குத் தெற்கு விரைவுச்சாலையில் 14 பயணிகளுடன் சென்ற சுற்றுலா பேருந்து தீப்பிடித்ததில், ஓட்டுநர் உட்பட 15 பேர் காயமின்றி உயிர் தப்பினர்.

ஓட்டுநரும் சுற்றுலா வழிகாட்டியும் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே அனைவரையும் பேருந்திலிருந்து வெளியேற்றினர்.

ஜோகூர் பாருவிலிருந்து, சுபாங்கிலுள்ள சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையம் நோக்கிச் சென்ற பேருந்தில், மதியம் 1.25 மணிக்கு 137-வது கிலோ மீட்டர் பகுதியில் தீ ஏற்பட்டது.

இதனையடுத்து, யோங் பெங் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, 9 வீரர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியது.

ஆனால் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடைவதற்கு முன்னரே தீயில் பேருந்தின் 80 சதவீதம் சேதமடைந்தது.

இந்நிலையில், தீ முழுமையாக மதியம் 2.48 மணிக்கு அணைக்கப்பட்டதாக யோங் பெங் தீயணைப்பு நிலைய செயல்பாட்டுப் பிரிவுத் தளபதி முஹமட் அமீர் ஷா ஹம்ஸா தெரிவித்துள்ளார்.

Related News

சிகரெட் துண்டை வீசிய குற்றம்: மலேசியாவில் முதல் முறையாக சிறைத் தண்டனை

சிகரெட் துண்டை வீசிய குற்றம்: மலேசியாவில் முதல் முறையாக சிறைத் தண்டனை

24 மணி நேர கேகே மார்ட் கடைகள் இனி பாதுகாப்பு மையங்களாக செயல்படும் - கோலாலம்பூர் போலீஸ் அசத்தல் திட்டம்

24 மணி நேர கேகே மார்ட் கடைகள் இனி பாதுகாப்பு மையங்களாக செயல்படும் - கோலாலம்பூர் போலீஸ் அசத்தல் திட்டம்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு