பொந்தியான், டிசம்பர்.13-
எரிபொருள் மையம் ஒன்றில் நிலக்கரியைத் தூக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த பாரந்தூக்கி இயந்திரம் ஒன்று குடை சாய்ந்து, தீப்பற்றிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் ஜோகூர், பொந்தியான், கூக்குப், ஜாலான் தஞ்சோங் பினில் உள்ள மலாக்கோவ் எரிபொருள் மையத்தில் நிகழ்ந்தது.
இதில் 19 வயது முகமட் அல்ஃபாரிட் அஹ்மாட் மற்றும் 22 வயது முகமட் அமாலுடின் ஹிசாமுடின் ஆகியோர் உயிரிழந்தததாக போலீசார் அடையாளம் கூறினர். இவர்கள் ஜோகூர் கெலாங் பாத்தாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதில் மற்றொரு நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய போதிலும் கடும் காயங்களுக்கு ஆளாகியுள்ளார்.








