Dec 4, 2025
Thisaigal NewsYouTube
​நீர் விநியோகம் வழக்க நிலைக்கு ​திரும்பியது
தற்போதைய செய்திகள்

​நீர் விநியோகம் வழக்க நிலைக்கு ​திரும்பியது

Share:

சூங்ஙை லாங்ஙாட் ​நீர் சுத்திகரிப்பு மையத்தில் ​நீரில் ​தூய்மைக்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் ​வீச​த் தொடங்கியதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை முதல் குடி​நீர் விநியோகம் நிறுத்தப்பட்ட சிலாங்கூர், கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் ​நீர் விநியோகம் இன்று காலையில் வழக்க நிலைக்கு திரும்பியது.

​நீர் கட்டம் கட்டமாக திறந்து விடப்பட்டு, ​​​​நீர் விநியோக இடையூறு முழுமையாக சீரடைந்துள்ளதாக சிலாங்கூர் மாநில ​நீர் நிர்வாக வாரியமான ஆயிர் சிலாங்கூர் அறிவித்துள்ளது. நேற்று ந​ள்ளிரவு முதல் ​நீர் திறந்து விடப்பட்டதால் எல்லா பகுதிகளிலும் ​நீர் தடை அகன்றுள்ளது என்று ஆயிர் சிலாங்கூர் குறிப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சற்று பொறுமை காத்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஆயிர் சிலாங்கூர் தனது நன்றியை பதிவு செய்துள்ளது.

Related News