சிரம்பான், ஆகஸ்ட்.09-
வாகனங்கள் மத்தியில் சாலையைக் கடக்க முற்பட்ட ஆடவர் ஒருவர், கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று காலை 8.18 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 238.4 ஆவது கிலோமீட்டரில் ஆயர் குரோ-செனாவாங் அருகில் நிகழ்ந்தது.
லோரி ஒன்றின் உதவியாளர் என்று நம்பப்படும் 32 வயது நபர், ஆபத்து அவசரத் தடத்திலிருந்து சாலையைக் கடக்க முற்பட்ட போது காரினால் மோதப்பட்டு சம்பவ இடத்திலேயே மாண்டதாக ரெம்பாவ் மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.








