Dec 23, 2025
Thisaigal NewsYouTube
மலேசியாவில் விமானச் சேவைகள் வழக்க  நிலைக்குத் திரும்பின
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் விமானச் சேவைகள் வழக்க நிலைக்குத் திரும்பின

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.23-

இன்று உலகம் முழுவதிலும் உள்ள பல விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் பயணிகள் செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பாதிக்கப்பட்டு இருந்த மலேசிய விமானச் சேவைகள், இன்று மாலையில் வழக்க நிலைக்குத் திரும்பின.

நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகள் செக்-இன் செய்வது மற்றும் விமானத்தில் ஏறும் போர்டிங் நடைமுறைகளில் தாமதம் ஏற்பட்டு இருந்த நிலையில் அனைத்தும் வழக்க நிலைக்குத் திரும்பி விட்டதாக MAHB எனப்படும் Malaysia Airports Holdings Berhad வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பயணிகள் எந்வித சிக்கலின்றி தங்கள் பயணத்தைத் தொடர்வதற்கு விமானச் சேவைகள் சுமூமாக நடைபெவறுவதை உறுதிச் செய்ய நடப்பு நிலை அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக MAHB தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related News