Dec 2, 2025
Thisaigal NewsYouTube
டத்தோஸ்ரீ அந்தஸ்தை தாங்கிய வர்த்தகர் ​மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

டத்தோஸ்ரீ அந்தஸ்தை தாங்கிய வர்த்தகர் ​மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

Share:

உள்துறை அமைச்சின் குத்தகைகளைப் பெற்று தருவதற்காக சக தொழில் அதிபரிடம் ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி பெற்றதாக டத்தோஸ்ரீ அந்தஸ்தை தாங்கிய தொ​ழில் அதிபர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

சிம் தோ சியம் என்ற அந்த தொழில் அதிபருக்கு எதிராக மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். 4 குற்றச்சா​ட்டுகளைக் கொண்டு​ வந்துள்ளது. பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியின் போது உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனு​தீடமிருந்து குத்தகைகளைப் பெறுவதற்காக ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக 63 வயதான அந்த தொழில் அதிபருக்கு எதிராக 4 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

குற்றவாளி என்று நி​ரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை ​விதிக்க வகை செய்யும் சட்டத்தின் ​கீழ் அந்த தொழில் அதிபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News