தலைமறைவாக உள்ள தொழிலதிபர் ஜோ லோ தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படும் மன்னிப்பு விண்ணப்பத்தை மலேசியா ஒருபோதும் பரிசீலிக்காது என்று பிரதமர் டத்தோ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்
இன்று சிரம்பானில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் தினக் கொண்டாட்ட நிகழ்வுக்கு தலைமையேற்றப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், ஜோ லோ மீதான நீதிமன்ற வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளதால், இந்த விவகாரமே எழாது என்றார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் ஜோ லோ மன்னிப்பு விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்துப் பேசிய பிரதமர், அமெரிக்கா எடுக்கும் முடிவு அவர்களின் சொந்த விஷயம் என்றும், மலேசிய அரசு இந்த வழியில் செல்லப் போவதில்லை என்றும் தெளிவுபடுத்தினார். 1எம் டி பி நிதி மோசடி தொடர்பாக, எஸ் பி ஆர் எம் மற்றும் போலீஸ் துறை ஜோ லோவைத் தொடர்ந்து தேடி வருவது குறிப்பிடத்தக்கது.








