Oct 11, 2026
Thisaigal NewsYouTube

இஸ்மாயில் சப்ரி 6 மணி நேர விசாரணைக்கு ஆளானார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இஸ்மாயில் சப்ரி 6 மணி நேர விசாரணைக்கு ஆளானார்

புத்ராஜெயா, மே.07-

ஒரு வார கால இடைவெளிக்குப் பிறகு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு மீண்டும் ஆளாகியுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், இன்று புத்ராஜெயா, எஸ்பிஆர்எம் தலைமையத்தில் சுமார் 6 மணி நேரம் விசாரணை செய்யப்பட்டார்.

காலை 11 மணிக்கு எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்குள் சென்ற இஸ்மாயில் சப்ரி, மாலை 5.03 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.

தனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள சட்டவிரோதப் பணமாற்றம், சொத்து குவிப்பு தொடர்பில் 65 வயதுடைய இஸ்மாயில் சப்ரி, தற்போது எஸ்பிஆர்எம் விசாரணை வளையத்திற்குள் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →