Sep 15, 2026
Thisaigal NewsYouTube
MyNIISe QR பயனர்களுக்கு பீ.எஸ்.ஐ-யில் முன்னுரிமை குடிநுழைவு சோதனை
தற்போதைய செய்திகள்

MyNIISe QR பயனர்களுக்கு பீ.எஸ்.ஐ-யில் முன்னுரிமை குடிநுழைவு சோதனை

Share:

இன்று முதல் ஜோகூர்பாரு, பாங்குனான் சுல்தான் இஸ்கந்தர், பீ.எஸ்.ஐ-யில் MyNIISe QR குறியீட்டைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு சிங்கப்பூர் செல்லும் குடிநுழைவு சோதனையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இந்த வசதி பேருந்து புறப்பாட்டு மண்டபத்தில் உள்ள 9 மற்றும் 10ஆம் எண் சோதனை மேசைகளில், அதிகாலை 4.30 மணி முதல் காலை 8 மணி வரை வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கு தினமும் வேலைக்காகச் செல்லும் மலேசியர்களின் காலை நேர நெரிசலைக் குறைத்து, குடிநுழைவு நடைமுறையை விரைவாகவும் எளிதாகவும் மாற்றுவதே இதன் நோக்கம் என டத்தோஸ்ரீ சைபுடின் விளக்கினார்.

MyNIISe, அரசாங்கத்தின் முக்கிய நிர்வாகச் சீர்திருத்த முயற்சிகளில் ஒன்றாகும். இந்த செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஹுவாய் ஆப் கேலரி ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related News

24 மணி நேர கேகே மார்ட் கடைகள் இனி பாதுகாப்பு மையங்களாக செயல்படும் - கோலாலம்பூர் போலீஸ் அசத்தல் திட்டம்

24 மணி நேர கேகே மார்ட் கடைகள் இனி பாதுகாப்பு மையங்களாக செயல்படும் - கோலாலம்பூர் போலீஸ் அசத்தல் திட்டம்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு