Sep 12, 2026
Thisaigal NewsYouTube
பகடிவதை  பொழுதுபோக்கு அல்ல; பதிவு செய்வதைவிட உடனே புகார் செய்யுங்கள்” – புக்கிட் அமான்
தற்போதைய செய்திகள்

பகடிவதை பொழுதுபோக்கு அல்ல; பதிவு செய்வதைவிட உடனே புகார் செய்யுங்கள்” – புக்கிட் அமான்

Share:

பகடிவதை சம்பவங்களைப் பார்த்தவுடன் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்வதைவிட, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் வலியுறுத்தியுள்ளார்.

பகடிவதை, விபத்து உள்ளிட்ட சம்பவங்களை மக்கள் உடனடியாக பதிவு செய்து வைரலாக்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அந்தத் தகவல்களை உரிய அமைப்புகளிடம் தெரிவிக்கத் தவறுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய செயல்கள் விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீண்டகால மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும் என்றும் டத்தோ குமார் தெரிவித்தார்.

பகடிவதை, நகைச்சுவையோ பொழுதுபோக்கோ அல்ல; அது தீவிரமான பிரச்சினை என்றும், பொதுமக்கள் குறிப்பாக இணையவழி பகடிவதை தொடர்பாகவும் தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related News

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்