Aug 11, 2026
Thisaigal NewsYouTube
ஈ.சி.ஆர்.எல் திட்டம்: சிலாங்கூரில் 2,000 வேலைவாய்ப்புகள் உருவாகும்
தற்போதைய செய்திகள்

ஈ.சி.ஆர்.எல் திட்டம்: சிலாங்கூரில் 2,000 வேலைவாய்ப்புகள் உருவாகும்

Share:

கிழக்குக் கரையோர ரயில் இணைப்புத் திட்டமான ஈ.சி.ஆர்.எல் மூலம் சிலாங்கூரின் ரயில்வே மற்றும் லொகோமோட்டிவ் துறையில் சுமார் 2,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

50.27 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இத்திட்டத்தால் உருவாகும் வேலைவாய்ப்புகளில் சுமார் 80 விழுக்காடு உள்ளூர் தொழிலாளர்களுக்கானதாக இருக்கும் என சிலாங்கூர் மனிதவள மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாபாராய்டு தெரிவித்தார்.

இளைஞர்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப கல்வி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.

மேலும், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 10ஆம் தேதி வரை சிலாங்கூரில் பத்தாயிரத்து 111 திவேட் பட்டதாரிகள் உருவாகியுள்ளதாகவும், அதே காலகட்டத்தில் டிப்ளோமா அல்லது அதற்கு மேற்பட்ட தகுதி தேவைப்படும் 78,030 வேலை காலியிடங்கள் இருந்ததாகவும் பாபாராய்டு தெரிவித்தார்.

இதில் வாகனத்துறை, குறைக்கடத்தி மற்றும் உற்பத்தித் துறைகள் உள்ளிட்ட உயர் திறன் பணிகளுக்கான 3,965 காலியிடங்களும் அடங்கும்.

மாவட்ட வாரியாக பட்டதாரிகளின் திறன்களை தொழில்துறை தேவைகளுடன் பொருத்தும் வகையில் ‘மேப்பிங்’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பாபாராய்டு வலியுறுத்தினார்

Related News