கங்கார், செப்டம்பர்.10-
தனது உறவுக்காரரின் 6 வயது மகனைத் துன்புறுத்தியதாக நம்பப்படும் பாரந்தூக்கி இயந்திர ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதுடைய அந்த நபர், கங்கார், கோல பெர்லிஸ், ஜாலான் கீலாங் ஐஸில் சிறுவனைத் துன்புறுத்தியது தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு நான்கு நாள் தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டது.
நான்கு நாள் தடுப்புக் காவல் அனுமதி முடிவடைந்ததைத் தொடர்ந்து அந்த நபரை மேலும் இரு தினங்களுக்குத் தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளனர்.








