மாரான், டிசம்பர். 13-
கார் ஒன்று விபத்தில் சிக்கி இரண்டு துண்டுகளானதில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று காலை 8.18 மணியளவில் மாரான், பண்டார் பூசாட் ஜெங்கா, ஜெங்கா 11 இல் நிகழ்ந்தது.
இவ்விபத்தில் கடும் காயங்களுக்கு ஆளான 24 வயது அமீர் ஸுல்ஃபாடில் அஸாஹார் சனுடின் என்பவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக மாரான் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் வோங் கிம் வாய் தெரிவித்தார்.
இந்த விபத்தில் வேறு எந்த வாகனமும் சம்பந்தப்படவில்லை. வேகக் கட்டுப்பாட்டை இழந்த புரோட்டோன் வீரா கார், சாலையை விட்டு விலகி அருகில் உள்ள செம்பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.








