Jun 30, 2026
Thisaigal NewsYouTube
வீட்டிற்கு 200 மீட்டருக்கு முன்னதாகவே நிகழ்ந்த கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
தற்போதைய செய்திகள்

வீட்டிற்கு 200 மீட்டருக்கு முன்னதாகவே நிகழ்ந்த கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

Share:

ஜோகூர், சிகமாட்டிற்கு அருகே நிகழ்ந்த கோரமான வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு வெறும் 200 மீட்டர் தொலைவிலேயே நிகழ்ந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை 4 மணியளவில், ஒரு வேனில் ஐந்து குடும்ப உறுப்பினர்கள் சிகமாட், பத்து அனாம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைய முயன்றபோது, பின்னால் வந்த லாரி மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.

71 வயது கே. மாயகிருஷ்ணன், அவரின் 65 வயது மனைவி எஸ். சிவந்தை மற்றும் வேன் ஓட்டுநரான சிவந்தையின் 75 வயது அண்ணன் மாயகிருஷ்ணன் ஆகியோர் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டனர்.

வேனில் இவர்களுடன் பயணித்த மாயகிருஷ்ணனின் பேரப்பிள்ளைகளான 22 வயது பி. ஹரிஹரன் மற்றும் 18 வயது பி. சுகுயா ஆகியோர் படுகாயமடைந்து சிகமாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

"ஐந்து நிமிடங்களில் வீட்டிற்கு வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் வீட்டின் வாசலிலேயே இப்படி ஒரு துயரம் நடக்கும் என்று நினைக்கவில்லை" என மாயகிருஷ்ணனின் பேத்தி ஆர். சுகந்தி கண்ணீருடன் தெரிவித்தார். உயிரிழந்த பழனியாண்டி மிகவும் அன்பானவர் என்றும், நீண்ட காலம் செம்பனைத் தோட்டத்தில் பணியாற்றியவர் என்றும் அவரது நண்பர்கள் நினைவுகூர்ந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய 29 வயது லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர் Methamphetamine எனும் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது நான்கு நாள் போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து சாலைப் போக்குவரத்துச் சட்டம் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் நெகிரி செம்பிலான், பகாவ் பகுதியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளன.

Related News