Oct 2, 2026
Thisaigal NewsYouTube

துப்பாக்கிச் சூடு மர்மம்: முக்கிய ஆதாரம் கிடைத்ததா? உயர்மட்டப் படைக் கையில் விசாரணை!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
துப்பாக்கிச் சூடு மர்மம்: முக்கிய ஆதாரம் கிடைத்ததா? உயர்மட்டப் படைக் கையில் விசாரணை!

கோலாலம்பூர், டிசம்பர்.07-

மலாக்கா, டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரின் குடும்பத்தினர் ஒரு மர்மமான CD-யைக் காவற்படையிடம் ஒப்படைத்துள்ளனர். அந்தக் குறுந்தகட்டில், சம்பவத்திற்கு முன் சந்தேக நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவைப் பதிவு இருப்பதாக நம்பப்படுகிறது என்று தேசியக் காவற்படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

விசாரணையின் ஒவ்வோர் அம்சமும் முறையாக, தொழில்நிலையிலாக, எந்தவித சமரசமும் இன்றி ஆராயப்படுவதை உறுதிச் செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. புக்கிட் அமான் மட்டத்தில் முழுமையான விசாரணையை நடத்த ஒரு உயர்மட்ட சிறப்புக் குழுவை காவற்படை அமைத்துள்ளது. இந்த விவகாரத்தில் மக்கள் எந்தவோர் ஊகத்தையும் கிளப்பவோ அல்லது தவறான தகவல்களைப் பரப்பவோ வேண்டாம் என்றும், தகவல் தெரிந்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறும் காவற்படைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →