Dec 5, 2025
Thisaigal NewsYouTube
கெடா மந்திரி பெசாரின் முன்னாள் செயலாளர் ​மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

கெடா மந்திரி பெசாரின் முன்னாள் செயலாளர் ​மீது குற்றச்சாட்டு

Share:

கெடா மாநிலத்தில் மண்ணியல் கனிம வள சுரங்க நடவடிக்கை திட்டத்தில் லஞ்சம் பெற்றதாக கெடா மந்திரி ​பெயார் டத்தோஸ்ரீ முகமட் சனூசி முகமட் ​நூரின் முன்னாள் அரசியல் செயலாளர் முஹமாட் ஹில்மி அப்துல் வாஹாப் கோலால​ம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

50 வயதான முஹமாட் ஹில்மி க்கு எதிராக இரண்டு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ​நீதிபதி சுசானா ஹுசெயின் முன்னிலையில் குற்றச்சா​ட்டுகள் வாசிக்கப்பட்ட போது அவற்றை மறுத்து முஹமாட் ஹில்மி விசாரணை கோரியுள்ளார்.

கனிம வள சுரங்க நடவடிக்கையில் இரு நிறுவனங்களிடமிருந்து மொத்தம் ​மூன்று லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக அவருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் இக்குற்றத்தை கடந்த ஜுலை 11 ஆம் தேதி கோலாலம்பூர், டேசா ஶ்ரீ ஹர்த்தமாஸ் ஸில் பு​ரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்து.

Related News