Jul 1, 2026
Thisaigal NewsYouTube
 மேக விதைப்பு நடவடிக்கையால் மலாக்கா, ஜோகூர் பகுதிகளில் மழை அதிகரிப்பு!
தற்போதைய செய்திகள்

மேக விதைப்பு நடவடிக்கையால் மலாக்கா, ஜோகூர் பகுதிகளில் மழை அதிகரிப்பு!

Share:

மலாக்கா மற்றும் ஜோகூர் மாநிலங்களில் கடந்த திங்கள் முதல் வியாழன் வரை மேற்கொள்ளப்பட்ட மேக விதைப்பு நடவடிக்கைகளால், குறிப்பிடத்தக்க அளவில் மழை உருவாக்கியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

மலாக்காவில் தினசரி 2 முதல் 24 மில்லிமீட்டர் வரை மழை பதிவாகியுள்ளதாகவும், அதே வேளையில், ஜோகூரில் 5 முதல் 40 மில்லிமீட்டர் வரை மழை பெய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இது குறித்து, துணை பிரதமரும், மத்திய பேரிடர் மேலாண்மை குழுத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கூறுகையில், இந்த நடவடிக்கையானது முதலில் மலாக்காவில் உள்ள 8 அணைகள் மற்றும் 2 நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மேற்கொள்ளப்பட்டதாகவும், பின்னர், கடந்த ஏப்ரல் 22 மற்றும் 23 தேதிகளில் ஜொகூரில் தொடரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் ஜொகூரில் நடைபெற்ற மூன்றாவது கட்ட நடவடிக்கையில் மாச்சாப், மேல் லாயாங், கீழ் லாயாங் புலாய் மற்றும் லெபாம் அணை பகுதிகளிலும், மேலும் கோத்தா திங்கியில் உள்ள லோக் ஹெங் கிளஸ்டர் மற்றும் புக்கிட் வாஹா ஆகிய பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த நடவடிக்கையில், மலேசிய விமானப்படை விமானம், சுபாங் விமான தளத்திலிருந்து புறப்பட்டு, மூன்று மணி நேரத்திற்குள் பல இலக்கு பகுதிகளை உள்ளடக்கி வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ள

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை