Oct 15, 2026
Thisaigal NewsYouTube

PAS கட்சியின் இளைஞர் தலைவர் Mohd Afnan Hamimi Taib Azamudden கூறியுள்ளார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
PAS கட்சியின் இளைஞர் தலைவர் Mohd Afnan Hamimi Taib Azamudden கூறியுள்ளார்

டிச. 30-

இளைஞர், விளையாட்டு அமைச்சர் ஹ ன்னா யோவுக்கு எதிராக அவதூறு வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வரும் முன்னாள் விரிவுரையாளர் Kamarul Zaman Yusoffக்கு இளைஞர் PAS ஆதரவு தெரிவித்துள்ளது. கமருலின் கருத்துக்கள் உண்மை அடிப்படையிலான பகுப்பாய்வு என்றும், அது அவதூறு குற்றச்சாட்டு அல்ல என்றும் PAS கட்சியின் இளைஞர் தலைவர் Mohd Afnan Hamimi Taib Azamudden கூறியுள்ளார்.

Kamarul வெளியிட்ட கருத்துக்கள் கூட்டரசு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ மதமான இஸ்லாத்தின் நிலைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், மலாய்-இஸ்லாமிய உணர்வுகளைத் சீண்டுவதாகவும் Mohd Afnan கருதுவதாகக் குறிப்பிட்டார். மேலும், இது நாட்டின் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் காவல் துறைத் தலைவர் மூசா ஹசன், 'கிறிஸ்தவ நாடு' என்று கூறியதற்கு எதிராக ஹன்னா யோ வழக்கு தொடரவில்லை என்றும், இது கமருலின் வாதத்திற்கு சாதகமாக அமையும் என்றும் PAS கட்சியின் இளைஞர் அணி தெரிவித்துள்ளது.

கமருல் கடந்த 2017 இல் வெளியிட்ட முகநூல் பதிவுகளில் ஹன்னா யோ கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்கான நோக்கத்தைக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்