Sep 7, 2026
Thisaigal NewsYouTube
காஜாங்கில் கார் துரத்தல் விபத்தில் முடிந்தது - போதைப்பொருளுடன் பெண் கைது, ஓட்டுநர் தப்பியோட்டம்
தற்போதைய செய்திகள்

காஜாங்கில் கார் துரத்தல் விபத்தில் முடிந்தது - போதைப்பொருளுடன் பெண் கைது, ஓட்டுநர் தப்பியோட்டம்

Share:

காஜாங், ஜாலான் ரெகோவில் நேற்று போலீஸ் சோதனையை மீறி தப்பிச் சென்ற காரில் இருந்து 2.13 கிராம் சியாபு வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அக்காரில் இருந்த வெளிநாட்டுப் பெண் கைது செய்யப்பட்ட நிலையில், அவருடன் இருந்த ஆடவர் தப்பியோடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் போலீசார் மேற்கொண்டிருந்த சோதனைக்கு நிற்காமல் அந்த காரானது செமிஞி நோக்கிச் சென்றதுடன், சில்க் நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் ஓட்டி விபத்துக்குள்ளானதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் தெரிவித்துள்ளார்.

பின்னர் ஜாலான் ரெகோ சந்திப்பில் போலீசார் அக்காரை மடக்கிப் பிடித்தனர்.

இந்நிலையில், அக்காரில் இருந்த பெண்ணிடம் முறையான பயண ஆவணங்கள் இல்லாததால் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளையில், போதைப்பொருள் உரிமையாளர் என நம்பப்படும் தப்பியோடிய ஓட்டுநரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இவ்வழக்கு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

Related News

திட்டம், நில பேரம் தொடர்பான எஸ்பிஆர்எம் விசாரணை: முன்னாள் ஃபெல்டா தலைமை நிர்வாகி நீதிமன்றத்தில் ஆஜர்

திட்டம், நில பேரம் தொடர்பான எஸ்பிஆர்எம் விசாரணை: முன்னாள் ஃபெல்டா தலைமை நிர்வாகி நீதிமன்றத்தில் ஆஜர்

ஜோகூர் லிடோ கடற்கரையில் புல்வெளியில் தீ - குடியிருப்பாளர்கள் பீதி

ஜோகூர் லிடோ கடற்கரையில் புல்வெளியில் தீ - குடியிருப்பாளர்கள் பீதி

கிளந்தான் - பேராக் வனப்பகுதி மலையேற்றம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், 2 வழிக்காட்டிகள் மாயம்

கிளந்தான் - பேராக் வனப்பகுதி மலையேற்றம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், 2 வழிக்காட்டிகள் மாயம்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது