ஜோகூர், கண்ட்ரி கார்டன் அருகே உள்ள லிடோ கடற்கரைப் பகுதியில் 1.2 ஹெக்டேர் பரப்பளவிலான லாலாங் புல்வெளியில் நேற்று இரவு திடீரென தீப்பற்றியது.
தீப்பிழம்புகள் வானத்தை ஒளிரச் செய்ததால், அருகிலுள்ள உயரமான ஆடம்பரக் குடியிருப்புகளில் வசித்தவர்கள் பீதியடைந்தனர்.
நேற்று இரவு 9.06 மணிக்கு தீப்பற்றிய நிலையில், லார்கின் மற்றும் தெப்ராவ் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் 14 நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்தனர்.
ஆறு தீயணைப்பு வீரர்கள் அருகிலிருந்த நீர்வாயிலுடன் இணைக்கப்பட்ட 122 மீட்டர் நீள குழாய் மூலம் தீயை அணைத்தனர்.
இந்நிலையில், இரவு 11.35 மணிக்குள் தீயானது முழுமையாக அணைக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








