Jun 12, 2026
Thisaigal NewsYouTube
தவாவில் குளிக்கும் பெண்ணை ஒளிந்திருந்த பார்த்த ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

தவாவில் குளிக்கும் பெண்ணை ஒளிந்திருந்த பார்த்த ஆடவர் கைது

Share:

சபா மாநிலம், தவாவ் பகுதியில், குளிக்கும் பெண்களை ஒளிந்திருந்து பார்க்கும் சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், அந்நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக செய்துள்ளதாக தவாவ் மாவட்ட போலீஸ் தலைவர் ஜாஸ்மின் ஹுசின் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 21-ஆம் தேதி, தமது வீட்டில் குளித்துக் கொண்டிருந்த அப்பெண்ணை, சந்தேக நபர் ஒளிந்திருந்து பார்த்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெறப்பட்ட சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களின் படி, 30 வயதுடைய உள்ளூர் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றவியல் சட்டம், பிரிவு 507A -இன் கீழ் பதிவு செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

Related News