May 23, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட பெர்சாமா திட்டம்
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட பெர்சாமா திட்டம்

Share:

வருகின்ற ஜோகூர் மாநிலத் தேர்தலில் பார்ட்டி பெர்சாமா மலேசியா கட்சியானது, அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவதாக அறிவித்துள்ளது.

தமது கட்சியானது, ஜோகூரில் போட்டியிட ஏற்ற தொகுதிகளை தற்போது அடையாளம் கண்டு வருவதாக முன்னாள் திராம் சட்டமன்ற உறுப்பினரும், ஜோகூர் தேசிய சமூகக் கொள்கை மன்றத்தின் முன்னாள் உதவித் தலைவருமான எஸ். கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தங்களின் நோக்கம் ஜோகூரில் உள்ள அனைத்து 56 தொகுதிகளிலும் கவனம் செலுத்துவதாகும் என்று குறிப்பிட்டுள்ள அவர், வேட்பாளர் தேர்வானது, கட்சித் தலைமையால் முடிவு செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, முன்னாள் பிகேஆர் தலைவர்களான டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ராம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அகமத் ஆகிய இருவரும், பார்ட்டி பெர்சாமா மலேசியா கட்சியில் தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரின் தலைமையிலான, பார்ட்டி பெர்சாமா மலேசியா கட்சியானது, பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தலைவர்களை மாநில அரசியலுக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Related News

தவாவில் குளிக்கும் பெண்ணை ஒளிந்திருந்த பார்த்த ஆடவர் கைது

தவாவில் குளிக்கும் பெண்ணை ஒளிந்திருந்த பார்த்த ஆடவர் கைது

மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் கொள்ளை முயற்சி - பிரிக்பீல்ட்ஸில் ஆடவர் கைது

மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் கொள்ளை முயற்சி - பிரிக்பீல்ட்ஸில் ஆடவர் கைது

புதிய வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டுதல்கள் அவசியமே - சிலாங்கூர் மாநில அரசாங்கம் விளக்கம்

புதிய வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டுதல்கள் அவசியமே - சிலாங்கூர் மாநில அரசாங்கம் விளக்கம்

சிறு வியாபாரிகளுக்கான கடனுதவிகளை நேரடியாகக் களத்தில் இறங்கி செயல்படுத்த / நிதி நிறுவனங்களுக்கு அன்வார் உத்தரவு

சிறு வியாபாரிகளுக்கான கடனுதவிகளை நேரடியாகக் களத்தில் இறங்கி செயல்படுத்த / நிதி நிறுவனங்களுக்கு அன்வார் உத்தரவு

சபாவில் போர்னியோ யானை கொல்லப்பட்ட சம்பவம் - டபிள்யூ.டபிள்யூ.எஃப் மலேசியா அமைப்பு கவலை

சபாவில் போர்னியோ யானை கொல்லப்பட்ட சம்பவம் - டபிள்யூ.டபிள்யூ.எஃப் மலேசியா அமைப்பு கவலை

நாடு முழுவதும் பள்ளி மாணவிகளுக்குத் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் அறிமுகம் - அமைச்சர் நான்சி சுக்ரி தகவல்

நாடு முழுவதும் பள்ளி மாணவிகளுக்குத் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் அறிமுகம் - அமைச்சர் நான்சி சுக்ரி தகவல்