Jun 6, 2026
Thisaigal NewsYouTube
சிறு வியாபாரிகளுக்கான கடனுதவிகளை நேரடியாகக் களத்தில் இறங்கி செயல்படுத்த / நிதி நிறுவனங்களுக்கு அன்வார் உத்தரவு
தற்போதைய செய்திகள்

சிறு வியாபாரிகளுக்கான கடனுதவிகளை நேரடியாகக் களத்தில் இறங்கி செயல்படுத்த / நிதி நிறுவனங்களுக்கு அன்வார் உத்தரவு

Share:

நாடெங்கிலும் சிறு வியாபாரிகளுக்கு வழங்கப்படும் கடன் உதவிகள் மற்றும் நலத் திட்டங்கள் குறித்து, அரசாங்க அமைப்புகளும், நிதி நிறுவனங்களும் நேரடியாக மக்களிடம் சென்று விளக்கமளிக்க வேண்டுமென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, சிறு தொழில் செய்வோர், அரசாங்கம் மூலமாகத் தங்களுக்கு கிடைக்கக்கூடிய நிதி உதவிகள் குறித்து தெளிவாக அறிந்து பயனடைய வேண்டும் என்பதற்காக, அதிகாரிகள் நேரடியாகக் களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

தாமான் மெலாவாத்தி உழவர் சந்தையை இன்று நேரில் பார்வையிட்ட பிரதமர் அன்வார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கசானா ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, நிதி வசதிகளும், கடன் உதவிகளும் பரவலாக கிடைத்தாலும் கூட, பலர் அவற்றைப் பற்றி இன்னும் அறியாமல் இருப்பதுடன், முழுமையாக பயன்படுத்தவும் தவறி வருவதாக குறிப்பிட்டார்.

மேலும், வியாபாரிகளை அலுவலகத்திற்கு வரவழைப்பதை விட, அதிகாரிகளே நேரடியாகச் சென்று அவர்களுக்குத் தேவையான கடனுதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக பேங்க் சிம்பானான் நேஷனல், தெக்குன் நேஷனல், பேங்க் ராக்யாட், அமானா இக்தியார் மலேசியா, மஜ்லிஸ் அமானா ராக்யாட் மற்றும் அக்ரோபேங்க் ஆகிய நிதி நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 400 ரிங்கிட் அளவிலான குறைந்த சேவைக்கட்டணத்துடன், அதிகமானோர் கடன்களைப் பெறும் வகையில் மக்களை ஈடுபடுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்